றிஷாட் கைது! அரசியல் நடகம் அமைச்சர் உதய கம்மன்பில

ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க கூறியதை போல் முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனை கைது செய்த சம்பவம் நரி நாடகம் என தனக்கு தெரியவந்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் றிசார்ட் பதியூதீன் தரப்புக்கு எதிராக தாம் குற்றம் சுமத்தியதாகவும் பொலிஸார் அவதானத்துடன் இருந்திருந்தால், அவரை கைது செய்ய கஷ்டப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.


றிசார்ட் பதியூதீனுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் ஆவணம் ஒன்றை பொலிஸாருக்கு அனுப்பிய நேரத்தில் இருந்து, பதியூதீன் குறித்து அவதானத்துடன் இருந்திருந்தால், அவரை கைது செய்ய பொலிஸ் அணிகளை ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

றிசார்ட் பதியூதீனை கைது செய்ய பொலிஸார் தயாராக இருக்கவில்லை எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares