றிஷாட் காட்டை அழித்து வீடுகளை கட்டினார்! 29ஆம் நீதி மன்ற அழைப்பாணை

பாதுகாக்கப்பட்ட வில்பத்து சரணாலயத்தின் காட்டுப் பகுதியில், காட்டை அழித்து சட்ட விரோத கட்டுமாணங்கள் மற்றும் மீள் குடியேற்றத்தை முன்னெடுத்தததாக கூறப்படும் விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு தொடர்பில் விடயங்களை முன்வைக்க எதிர்வரும் 29 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு இந்த மீள அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இன்று (08) இரண்டாவது தடவையாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஜனக் டி சில்வா மற்றும் நிஷங்க பந்துல கருணாரத்ன ஆகியோர் இந்த அறிவித்தலை பிறப்பித்தனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares