பிரதான செய்திகள்

றிஷாட் உடனடியாக பதவி விலக வேண்டும்! ஆனந்த சாகர தேரர்

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சதொச களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த சீனி கண்டய்னரில் இருந்து கொகேய்ன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ள நபர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதற்காக அமைச்சர் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் பொலிஸாருக்கு விசாரணைகளை முன்னெடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மீட்கப்பட்டுள்ள கொகேய்ன் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் ஆனந்த சாகர தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை வெளிப்படுத்துவதால் தமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தாலும் பிரச்சினை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலர் இது தொடர்பில் கதைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த போதும், தான் கொலை செய்யப்பட்டாலும் உண்மை உலகுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

திருகோணமலை விளையாட்டு மைதானத்தை வழங்க கோரி வீரர்கள் வீதி போராட்டம்

wpengine

மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை

wpengine

பிரித்தானியாவுக்கு விளையாட சென்ற இலங்கை வீரர்கள் ஒட்டம்

wpengine