பிரதான செய்திகள்

றிஷாட்டை பழி தீர்க்க 10வருட திருடனுடன் கூட்டு சேர்ந்த டயஸ்போராவின் முசலி முஜூப் றஹ்மான்

(அப்துல் கையூம்)

மேலே உள்ள படத்தில் கறுப்பு அங்கியுடன் இருப்பவர் யாரென்று உங்களுக்குத் தெரிகின்றதா? இவர் ஒரு சட்டத்தரணியுமல்ல. பாராளுமன்ற உறுப்பினருமல்ல. அரசியல்வாதியுமல்ல. டிப் டொப்பான உடையுடன் இந்த கறுப்புச் சட்டைக்காரர் காட்சியளித்த போதும், இவர் ஒரு பக்காத் திருடர் 10 வருடங்களுக்கு முன்னர் மன்னார் பெரிய கடையில் கள்ளக்கும்பலுடன் சேர்ந்து இரவோடு இரவாக அங்கிருந்த சித்தி தங்கமாளிகையில் நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்து ஜெயிலில் இருந்த ஆசாமி.

இவர் கொள்ளையில் ஈடுபட்டபோது, அதனைக் காவலர் ஒருவர் கண்டுவிட்டதால், அந்த அப்பாவியைக் கொன்றுவிட்டு அவரது சடலத்தை தனது வாகனத்தில் ஏற்றிச்சென்று தூர இடமொன்றில் புதைத்த படுபாதகன்.

ஆட்களை மிரட்டி கப்பம் கேட்பதும் வெளிநாட்டுக்கு ஆட்களை ஏற்றுவதாகக் கூறி இலட்சக் கணக்கில் பணத்தை வாங்கி தலைமறைவாவதும் இவருக்கு கைவந்த கலை. இவருக்கு இன்று வரை எந்தத் தொழிலும் இல்லாத போதும் கொழும்பில் வசதியான வாழ்க்கையொன்றையே வாழ்கின்றார். தெஹிவளையில் ஆடம்பரமான வீடொன்றை முஸ்லிம் காங்கிரஸ் இவருக்கு வாடகைக்குப் பெற்றுக் கொடுத்திருக்கின்றது. அமைச்சர் றிஷாதை கேவலப்படுத்துவதற்காகவும் அபாண்டங்களைப் பரப்புவதற்காகவுமே இவருக்கு சுளை சுளையாக பணம் முஸ்லிம் காங்கிரசிடமிருந்து கிடைக்கின்றது.

அண்மையில் கொழும்பில் பிரபல ஹோட்டலில் இவரது இரண்டு பிள்ளைகளுக்கும் ஆடம்பரமான திருமணம் நடைபெற்றது. வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அப்பாவிகளிடமிருந்து பெற்ற பணமும் அமைச்சர் றிஷாதை வீழ்த்துவதற்காக அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட சக்திகளால் இவருக்கு அவ்வப்போது வழங்கப்படும் வெகுமதிகளின் மூலமே இவர் இந்த ஆடம்பர திருமணத்தை நடத்தி முடித்தார்.

அமைச்சர் றிஷாதை எப்போதுமே குறிவைத்து செயற்படும் இவர் அமைச்சர் றிஷாதை எப்படியாவது வீழத்தி விட வேண்டும் என்று சதி முயற்சிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றார்.

கடந்த பொதுத்தேர்தல் காலத்தில் அமைச்சர் றிஷாதின் மீது 13 போலியான குற்றச்சாட்டுக்களை சோடித்து நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, மற்றும் புலனாய்வுப்பிரிவு ஆகியவற்றுக்குச் சென்று அங்கே சமர்ப்பித்துவிட்டு பின்னர் கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபை உறுப்பினரான சட்டத்தரணி ரிஸ்வி ஜவகர்சாவுடன் இணைந்து ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடாத்தினார். அமைச்சர் றிஷாட் மீது அபாண்டங்களை பரப்பினார். அமைச்சர் றிஷாதை அந்தத் தேர்தலில் அவமானப்படுத்தி அவர் தோற்கடிப்பதே முஸ்லிம் பாங்கிரசினதும் குவைதீர்கானினதும் நோக்கமாக இருந்தது. இந்த கபட நாடகங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் பின்னணியில் இருந்தார்.

இநத விடயத்தில் தோல்வி கண்ட முஸ்லிம் காங்கிரஸ், குவைதீர்கானைப் பயனபடுத்தி வட்ஸ்அப் குழுமங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் முஸ்லிம் காங்கிரசின் போலி இணையத்தளங்களிலும் இல்லாத பொல்லாத விடயங்களை பரப்பி வருகின்றனர். அமைச்சர் றிஷாட்டுடன்  இறைவன் இருப்பதால் சமூகத்தை ஏமாற்றும் இந்தக் கும்பல்களால் ஒன்றுமே செய்ய முடியாதுள்ளது. இவர்கள் எத்தனையோ சதி முயற்சிகளை மறைமுகமாக செய்து வருகின்ற போதும் எல்லாவற்றிலும் ஏமாற்றமே கிடைத்து வருகின்றது. எனினும் இறைவனின் உதவியால் அமைச்சர் றிஷாட் அரசியலில் நல்ல பெயரையும் சமூகத்தில் நல்ல மதிப்பையும் பெற்று எழுச்சிபெற்று வருகின்றார்.

குவைதீர்கான் தனது முயற்சிகள் கைகூடாத நிலையில் இப்போது புது முயற்சியொன்றை மேற்கொண்டுள்ளார். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் அமைப்புடன் இணைந்து அமைச்சர் றிஷாதை வீழத்துவதற்காக பல  சதிகளை அரகேற்றத் துடிக்கின்றார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைக்குழு உறுப்பினரும் முசலிப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும் ‘மீள் பார்வை’ என்ற இஸ்லாமியப் பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மானுடன் கூட்டுச் சேர்ந்து அமைச்சர் றிஷாதை எப்படியாவது வீழ்த்துவதற்காக புதிய திட்டமொன்றை வகுத்துள்ளார்.

டயஸ்போராக்களுடன் மிக நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கும் முஜிபுர் ரஹ்மானும் இந்தக் குவைதீர்கானும் இணைந்து இன்று காலை (2017.08.17) போலி ஆவணங்கள் அடங்கிய ஒரு கட்டு பைல்களுடன் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு சென்று அமைச்சர் றிஷாட் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். இவர்களது போலியான ஆவணங்களை ஏற்க மறுத்த ஆணைக்குழு அதிகாரிகள் இவர்களை திருப்பி அனுப்பியதால் மூக்குடைபட்டு சென்றுள்ளனர்.

கார்களிலேயே  கொழும்பின் மூலை முடுக்கெல்லாம்  சுற்றித் திரியும் இவர், இன்று காலை கோட் சூட்  அணிந்து டிப் டொப்பாக ஆட்டோவில் ஆணைக்குழுவிற்கு சென்றமை குறிப்பிடத்ததக்கது.

அமைச்சர் றிஷாதை வீழ்த்துவதற்காக முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போய்விட்ட நிலையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் இணைந்து புதிய பேரம் பேசலுடன்  இந்த நாடகத்தை மீண்டும் அரகேற்றி இருக்;கின்றார். நல்லாட்சிக்கான தேசிய முன்னணி குவைதீர்கானை பயன்படுத்துகின்றதா? குவைதீர்கான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைப் பயன்படுத்துகின்றாரா? எனினும் அந்த இயக்கத்தின் மீது இப்போது பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

குவைதீர்கான் ஒரு ‘போடு காலியாக’ இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். ஏற்கனவே வில்பத்து விடயத்தில் ஞானசார தேரருக்கும், ஆனந்த சாகர தேரருக்கும் அமைச்சர் றிஷாட் தொடர்பில் பொய்யான பல விடயங்களை கூறியவர் இவர். அந்த இனவாதிகளின்  உளவாளியாக இருந்து முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக்கொடுத்தவர். இந்த குவைதீர்கான் இப்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினூடாக டயஸ்போராக்களின் கோடிகளை பெற்று அமைச்சர் றிஷாதை அழிக்க முயல்கின்றாரா? என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.

Related posts

வவுனியாவில் கடத்தல் சம்பவம்! ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் வடமாகாண அமைப்பாளர்

wpengine

மன்னார்-கற்கடந்த குளம் மற்றும் அச்சங்குளம் பகுதி தனிமைப்படுத்தல்

wpengine

Northern Politicos Not Happy

wpengine