றிசாத் பதியுதீன் பௌண்டேசனினால் மாணவர்களுக்கு கௌரவம் வழங்கும் நிகழ்வும் கற்றல் உபகரணம் வழங்கலும்

(எம்.வை.அமீர்)

மிக நீண்ட காலமாக பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கிவரும் றிசாத் பதியுதீன் பௌண்டேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான, கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் வேண்டுகோளின் பேரில், எதிர்வரும் 2016-05-12 ஆம் திகதி சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் மாபெரும் நிகழ்வொன்றை நடாத்தவுள்ளது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்கள் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கௌரவ நினைவுச் சின்னங்களையும் கற்றல் உபகரனங்களியும் வழங்கி வைக்கவுள்ளார்.

இம்முறை பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களும் (சகல துறைகளுக்கும்), கல்விப்பொதுதராதர சாதாரணதரத்தில் 9A மற்றும் 8A சித்திகளைப் பெற்ற, அம்பாறை மாவட்ட முஸ்லிம் மாணவர்களே இங்கு கௌரவத்தையும் கற்றல் உபகரனங்களியும் பெறவுள்ளனர்.

நடைபெறவுள்ள கௌரவ நிகழ்வுக்கு தகுதியுள்ள, இதுவரையும் விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக 0777561654 அல்லது 0771896767 அல்லது 0777980044 அல்லது 0672224584 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஒன்றுடன் தொடர்புகொண்டு தங்களது இணைவை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு றிசாத் பதியுதீன் பௌண்டேசனின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares