பிரதான செய்திகள்

றிசாட் – விக்கி கருத்து முரண்பாடு! முதலமைச்சரின் கருத்து உண்மைக்கு மாறானது.

வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவில் ஸ்தாபிப்பது தொடர்பில் வட மாகாண முதலமைச்சருக்கும், மத்திய அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.


இதன் ஒரு கட்டமாக நேற்று யாழ்ப்பாணம் கோண்டாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது முதலமைச்சர் விக்னேஷ்வரன் சில தகவல்களை வெளியிட்டார்.

கடந்த திங்கட்கிழமை மத்திய அமைச்சரவையின் கூட்டத்திற்கு சென்றிருந்த போது, அமைச்சர் பீ. ஹரிசன் வவுனியாவிற்கான பொருளாதார மையத்தை மதவாச்சிக்கு கொண்டு செல்வதற்கான
அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தமை தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

வடமாகாண முதலமைச்சரின் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என எமது செய்திச் சேவையுடன் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொருளாதார மையம்
மதவாச்சிக்கு கொண்டு செல்லப்படுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்தார

Related posts

கணவனை இழந்த மற்றும் தாய் , தந்தையை இழந்த 50 குடும்பங்களுக்கு புனித ரமழானை முன்னிட்டு உதவ முன்வாருங்கள்

wpengine

இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் கட்டார்

wpengine

ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு வேண்டுகோள்

wpengine