பிரதான செய்திகள்

ரோஹிங்கிய முஸ்லிம்களை சுற்றிவளைத்த நல்லாட்சியின் பிக்குகள்

இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் வசித்த வீடொன்று பௌத்த பிக்குகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

ரோஹிங்யா முஸ்லிம்கள் 36 பேர் தங்க வைக்கப்பட்டிருந்த கல்கிஸ்ஸை வீட்டை இன்று காலை திடீரென்று சிங்கலே ஜாதிக பலமுளுவ (Sinhale Jathika Balamuluwa ) சுற்றி வளைத்திருந்தனர்.

இதன்போது பெளத்த பிக்குகள் மற்றும் டான் பிரசாத் போன்றோர் அகதிகள் மீது தாக்குதல் தொடுக்கும் நோக்கில் கடும் அச்சுறுத்தலாக செயற்பட்டதை அடுத்து அப்பிரதேசத்தில் பெரும் அச்ச நிலையொன்று ஏற்பட்டது.

ரோஹிங்யர்கள் அகதிகள் அல்லவென்றும் அவர்கள் பயங்கரவாதிகள் என்றும் சிங்கலே ஜாதிக பலமுளுவ உறுப்பினர்கள் கோஷமிட்டுள்ளனர்.

இதனையடுத்து அவ்விடத்துக்கு விரைந்து வந்த கல்கிஸ்ஸை பொலிஸார் ரோஹிங்யா அகதிகளை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

2017 ஏப்ரல் மாதம் இலங்கை வந்தடைந்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் 36 பேரை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையகம் (UNHCR, the UN Refugee Agency) பொறுப்பேற்று மிரிஹானா தடுப்பு முகாமில் பொலிஸ் பொறுப்பில் வைத்திருந்தது.
அந்த அகதிகளே கல்கிஸ்ஸையில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மொட்டு கட்சிக்கு முஸ்லிம்கள் இன வேறுபாடின்றி எமது கட்சிக்கு வாக்களிப்பாா்கள்.

wpengine

அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நிதி ஒதுக்கீடு!

Maash

மடு பிரதேச செயலக தைப்பொங்கல் நிகழ்வு

wpengine