பிரதான செய்திகள்

ராஜிதவின் அமைச்சரவை இணைப் பேச்சாளர் பதவிக்கு வரபோகும் ஆப்பு

டொக்டர் ராஜித சேனாரட்ன அமைச்சரவை இணைப் பேச்சாளர் பதவியிலிருந்து நீக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தினை வலுவாக முன்னெடுப்பதற்கு ராஜித சேனாரட்ன அமைச்சரவை இணைப் பேச்சாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோர உள்ளனர்.

அமைச்சர் ராஜித தொடர்பில் இவர்கள் முறைப்பாடு செய்ய உள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் வார இறுதிப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் பேச்சுவார்த்தைகள் தற்போது நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் அமைச்சர் ஜோன் செனவிரட்னவை, அமைச்சர் ராஜித பகிரங்கமாக திட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ராஜித சேனாரட்னவின் கருத்துக்கள் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளதாக ஆளும் கட்சி அமைச்சர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Related posts

மன்னார்,பெரிய மடு பகுதியில் நெல் அறுவடை நிகழ்வு டெனீஸ்வரன்,றிப்ஹான் பங்கேற்பு

wpengine

நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இலவச கணித, விஞ்ஞானக் கருத்தரங்கு .

wpengine

பொதுத்தேர்தல் உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல்

wpengine