ராஜிதவை பார்வையிட ஜனாதிபதி சிங்கப்பூருக்கு அவசர பயணம்

சுகயீனம் காரணமாக சிங்கப்பூரின் பிரபலமான மலவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று காலை 7.41 மணியளவில் அவசரமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

யுஎல்302 என்ற விமானத்திலேயே ஜனாதிபதி சென்றுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை அடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக கடந்த 20 ஆம் திகதி சிங்கப்பூருக்கு சிறப்பு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares