உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர  மோடியின் பெயர்  குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

இதனிடையே தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடியாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Related posts

மின் தடையா? அவசர அழைப்பு புதிய இலக்கம் 1987

wpengine

பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை

wpengine

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் காசோலை மோசடி! உத்தியோகத்தர் கைது

wpengine