ரவிராஜ் வழக்கில் விரைவில் சிலர் கைது: தாஜூடின் கொலையாளிகளுக்கு தண்டனை கிடைக்கும்- அஜீத் பீ. பெரேரா

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணத்துக்குப் பொறுப்பானவர்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என, பிரதி அமைச்சர் அஜீத் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த மரணம் கொலை என, தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அஜீத் பீ. பெரேரா இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்கள் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares