பிரதான செய்திகள்

ரவிக்கு பின்னால் பல ஊழல் புள்ளிகள்! ரணில் பதவி விலக வேண்டும்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை இராஜினாமா செய்ய வைத்துவிட்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் பெரிய திருடர்கள் தப்பித்துக்கொள்ள முற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடியில் ரவி கருணாநாயக்க மாத்திரமல்லாது மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது. இதன் பின்னணியில் பிரதமர் ரணிலும் இருக்க வேண்டும்.

குறித்த விடயத்தினை நீதியாக கையாள வேண்டுமாக இருந்தால் ரவி கருணாநாயக்கவுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகியிருக்க வேண்டும்.

2015ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணை முறி ஏலம் விடுவது தொடர்பான கலந்துரையாடலில் அமைச்சர் மலிக் சமர விக்ரம மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

நாட்டின் நிதி தொடர்பான கலந்துரையாடலில் அவர்கள் கலந்து கொண்டுள்ள, நிலையில், இந்த விடயமே மத்திய வங்கி பிணை முறி மோசடியின் பின்னணியில் முக்கிய புள்ளிகள் இருப்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது.

இந்நிலையில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை இராஜினாமா செய்ய வைத்துவிட்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் பெரிய திருடர்கள் தப்பித்துக்கொள்ள முற்படுகின்றனர்.

எனவே, இது குறித்த விசாரணைகள் நீதியாக முன்னெடுக்கப்பட்டு ஊழல் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும்” என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அளுத்கம தர்கா நகரில் புறாக்களை கொன்று Tik Tok வெளியிட்ட மூவர் கைது!

Editor

அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக…!

wpengine

பேஸ்புக் பதிவால் பாதிப்படைந்த பெண் தற்கொலை

wpengine