ரவிக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை! சம்பிக்கை குறித்து இன்று ஆராய்வு

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ள பொது எதிரணி, இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் திரட்டும் பணியை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்குமாறு பொது எதிரணியிலுள்ள உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது மேற்படி விவகாரம் பற்றி விரிவாக ஆராயப்படவுள்ளது.

வருமான வரி, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுத்தியமை, நாளுக்கு நாள் நாணயத்தின் பெறுமதி குறைவடைதல், வெளிநாட்டுக் கையிருப்பில் நிலவும் வீழ்ச்சி, அதிக வட்டிக்கு கடன் பெறல் போன்ற காரணங்களை வைத்தே நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப் போவதாக பொது எதிரணி கூறியுள்ளது.

அத்துடன், இளைஞர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிய சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது பற்றியும் இன்று ஆராயப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஷா தெரிவித்தார்.

இவ்விரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் தனித்தனியாக கொண்டு வருவதா அல்லது பொதுவாக அரசுக்கு எதிராக கொண்டு வருவதா என்பது பற்றியும் இன்று புதன்கிழமை ஆராயப்படும் என்றும் அவர் கூறினார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares