செய்திகள்தொழில்நூட்பம்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

ரயில் கடவையில், துவிச்சக்கர வண்டியில் கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ரயில் மோதி பலி..!!!!

யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் உள்ள ரயில் கடவையில் நேற்று புதன்கிழமை ரயில் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சுந்தரக்குருக்கள் ஞானசர்மா (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று பிற்பகல் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தார். ரயில் வரும்போது ரயில் கடவை மூடப்பட்டிருந்தபோதும் அதனை கடப்பதற்கு முயற்சித்தவேளை ரயில் அவரது துவிச்சக்கர வண்டியின் பின் பக்கத்தில் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

வங்கி கடன் வட்டி 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளன.

wpengine

கிழக்கு மாகாண சபையின் முதலைமைச்சர் வேட்பாளராக ஹசனலி?

wpengine

அமைச்சர் நிமல் சிறிபாலவின் தலைமையில் இரகசிய குழு

wpengine