பிரதான செய்திகள்

ரணில்,மைத்திரி மூன்றாவது அமைச்சரவை மாற்றம்

நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது அமைச்சரவை மாற்றம் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சுப் பதவிகளிலேயே மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலும் விரைவில் அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புத்தாண்டுக்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

மட்டக்களப்பு ஜெயராஜ்ஜின் புதிய கண்டுபிடிப்பு

wpengine

‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ இன்று

wpengine

முதலமைச்சர் நஷீர் அஹமட் எதிராக இன்று நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

wpengine