ரணில்,சஜித் மீண்டும் சண்டை! பேச்சுவார்த்தை தடை

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைப்பது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இரண்டு கட்சிகளின் அணிகளிடையே ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தார்.


அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.


எனினும் ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு எதிரான முன்வைத்த எதிர்ப்பு காரணமாக பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares