ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் அளவுக்கு மூளை கோளாறு இல்லை-அமைச்சர் ரோஹித்த

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் எவ்வித தயார் நிலையும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை வகிக்க தகுதியான நபர் தற்போது அந்த பதவியை வகித்து வருகிறார் எனவும் அவர் கூறியுள்ளார். பிரதமர் பதவி மற்றும் தேசிய அரசாங்கம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக இன்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிடப்பட்டது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் அளவுக்கு மூளை கோளாறு கொண்ட எவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இல்லை என நினைப்பதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கூறியுள்ளார்.

செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் அதன் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட உள்ளதாகவும் அண்மைய காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares