பிரதான செய்திகள்

ரணிலுக்கு எதிராக கையொப்பமிட்டவர்கள் கொலைகாரர்களும், கடத்தல்காரர்களுமே

பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்கள் கொலைகாரர்களும் கடத்தல்காரர்களுமே என அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்கள் யார்? லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட போன்ற ஊடகவியலாளர்களை கடத்தியவர்களும் கொலை செய்தவர்களுமே.

கொலை, கொள்ளை, கடத்தல் போன்றவற்றுடன் தொடர்புடையவர்களே இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளார்கள்.

இவ்வாறிருக்கு இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை எவ்வாறு நம்புவது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஏற்பட்ட அனைத்து விதமான ஆபத்திலிருந்தும் அவரை காப்பாற்றியது ரணில் விக்ரமசிங்கவே எனவும் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

அர்ஜுன் மஹேந்திரனை நியமித்​த குற்றத்துக்காக பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவீர்களாயின், மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக 100 பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Related posts

தூங்கிக் கிடந்தவர்களை தட்டியெழுப்பி ஓடித்திரியவைத்துள்ளோம்! சம்மாந்துறையில் தலைவர் ரிஷாட்

wpengine

சமகால முஸ்லிம் அரசியலும் உள்ளூராட்சித் தேர்தலும்

wpengine

வடக்கு மாகாணசபையின், முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முற்றிலும் நீதிக்கு புறம்பானதும்

wpengine