பிரதான செய்திகள்

ரஞ்ஜன் ராமநாயக்க ஒரு பைத்தியக்காரரா?

மகாசங்கம் என்பது பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்பட்டவர்களின் நிறுவனம் என யாராவது கூறுவார்களா? அவ்வாறு கூறுவார்களாயின் அவரின் மூளையை முதலில் பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ராவனா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கவினால் மகா சங்கத்தினருக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து தொடர்பில் பேசிய அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

இந்நாட்டிலுள்ள தேரர்களை பாலியல் துஸ்பிரயோகத்துடன் தொடர்புபடுத்தியும், இதனால், தேரர்கள் குரோதத்துடனே சமூகத்தைப் பார்ப்பதாகவும் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ரஞ்ஜன் ராமநாயக்க ஒரு பைத்தியக்காரரா? என கண்டறிய வேண்டும். இவருடைய இவ்வாறான கருத்துக்களுக்கான தூண்டுதல் காரணி என்ன என்பதை தேடிப் பார்த்தல் வேண்டும்.

இவர் சிறிக்கொத நியமித்த ஒருவர் என்பதனால், இதற்கு சிறிக்கொத பொறுப்புக் கூற வேண்டும். இவருடைய கூற்றினால் முழு சங்க சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள சஜித் பிரேமதாசவிடம் இவர் குறித்த கருத்து என்னவென்பதை தெளிவுபடுத்துமாறு கூறுகின்றோம்.

சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி வேட்பாளராக வருவதாயின் ரஞ்ஜனுக்கு எதிரான நடவடிக்கை என்னவென்பதைக் கூற வேண்டும்” என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படும்!-ஜானக்க வக்கும்புர-

Editor

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் அரசியல் பழிவாங்கும் இடமாற்றம்

wpengine

ஜனாதிபதியின் நிகழ்வில் படு கேவலமாக நடந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர்

wpengine