யோசித ராஜபக்சவின் பிணை மனு இன்று விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் பிணை மனு இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

நிதிச் சலவை மற்றும் பொது சொத்து துஸ்பிரயோகம் என்ற அடிப்படையில் யோசித ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதன் பின்னணியில் யோசித ராஜபக்ச, நிசாந்த ரணதுங்க, ரொஹான் வெளிவிட்ட உளிட்ட ஐந்து பேர் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

யோசித உள்ளிட்டவர்களுக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதேவேளை, யோசித உள்ளிட்டவர்களை எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares