பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ். மரியன்னை தேவாலயத்தில் ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்!

ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. 

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் , நட்சத்திர விடுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 39 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 250இற்கும் மேற்பட்டோரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. 500இற்கும் மேற்பட்டவர்கள் அவயவங்களை இழந்து குடும்பத்தை இழந்தனர்.

அன்றைய தினம் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக யாழ். மரியன்னை தேவாலயத்தில் காலை 8.45 மணியளவில் தேவாலய மணி ஒலிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் மெழுகுதிரி ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனைகளும்  இடம்பெற்றன. 

Related posts

நகர சபை தவிசாளரினால் மினுவாங்கொட பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

wpengine

பேருந்து மற்றும் இராணுவ லொரி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி .

Maash

வவுனியா,யாழ் மாவட்ட மாவட்டச் செயலாளர் மரணம்

wpengine