செய்திகள்மன்னார்யாழ்ப்பாணம்

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, தீ விபத்தில் சிக்கிய மன்னார் யுவதி மரணம் .

தீ விபத்தில் சிக்கிய வதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மன்னார் – பண்டிவிரிச்சான் மேற்கு, மடு பகுதியைச் சேர்ந்த மேரி எமில்தா விக்கிரமரட்ன (வயது-27) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி கடந்த மாதம் 12 ஆம் திகதி குளிர்காய்வதற்காக அடுப்பைப் பற்றவைத்துள்ளார். இதன்போது அவரது ஆடையில் தீப்பற்றி தீ விபத்துக்கு உள்ளாகினார். அவர் அன்றையதினமே பண்டிவிரிச்சான் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அதன்பின்னர் மறுநாள் 13ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.

Related posts

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 24 மணி நேரம் இயங்கும் .

Maash

இன்று ஏட்பட்ட வாகனவிபத்தில் இளைஞன் பலி.!

Maash

அரச நியமனங்கள் கோரி வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில்.

Maash