யாழ் பேஸ்புக் காதலுக்கு 10லச்சம் ரூபா நகை வழங்கிய பெண்

பேஸ்புக் மூலம் அறிமுகமான யாழ்ப்பாண பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பண உதவி செய்வதற்காக சகோதரியின் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடி 6,20, 000 ரூபாவுக்கு விற்பனை செய்தார் எனக் கூறப்படும் 36 வயது பெண் ஒருவரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கம்பளை நகர் பிரதேசத்தைச் சேர்ந்த கூட்டு குடும்பம் ஒன்றில் மூத்த சகோதரனின் மனைவியான சந்தேக நபரான குறித்த பெண்ணுக்கு சில காலங்களுக்கு முன்னர் தனது பேஸ்புக் மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் அறிமுகம் கிடைத்துள்ளதாகத் தெரிய வருகிறது.


பின்னர் இருவரின் பழக்கத்திலும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதேவேளை குறித்த இளைஞருக்கு பணம் தேவைப்படவே அதனை கொடுத்து உதவும் முகமாகவே சந்தேக நபரான 36 வயதுடைய குறித்த குடும்பப் பெண் தனது கணவரின் தம்பி மனைவியின், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை திருடி தனது தோழியுடன் இணைந்து கெலிஓயா நகரில் அமைந்துள்ள நகை கடை ஒன்றில் 6,20, 000 அதனை விற்பனை செய்துள்ளார்.


இதில் முதல் கட்டமாக 90,000 ரூபாவை குறித்த இளைஞருக்கு தொலைபேசி பண பரிமாற்றத்தின் மூலம் அனுப்பி வைத்ததாகவும் தெரிய வருகிறது.
இந்த நிலையில் தங்க நகைகள் காணாமல் போனவை குறித்து கம்பளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபரான பெண்ணின் தோழியிடம் இருந்த பற்றுச் சீட்டை அடிப்படையாக கொண்டு பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளையடுத்தே விடயம் தெரிய வந்துள்ளது.


இதன் போது சந்தேக நபரான பெண்ணையும் அவருக்கு உடந்தையாக இருந்த தோழியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares