யாழ்-கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விடுமுறை-ஆளுநர்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை 7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.


சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.


புரெவிப் புயல் காரணமாக கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களும் வடக்கு மாகாணம் முழுவதும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.


இந்தநிலையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமையும் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares