பிராந்திய செய்திமுல்லைத்தீவுயாழ்ப்பாணம்

யாழ் இளைஞன் முல்லைத்தீவு நீர்நிலையில் சடலமாக..!

முல்லைத்தீவு – வற்றாப்பளை பகுதியில் 16 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர் வீட்டுக்கு வருகை தந்த குறித்த சிறுவன் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்ததாக தெரிய வருகிறது.

இதனை அடுத்து அருகில் இருந்த நீர் நிலை ஒன்றில் இருந்து இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

16 வயதுடைய இந்த சிறுவன் கொலை செய்யப்பட்டு நீரில் வீசப்பட்டாரா? அல்லது விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளதா? என்ற கோணத்தில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின்  முழு நிலா கலைவிழா.

wpengine

முகக்கவசம் இல்லாதவர்களுக்கு வவுனியாவில் தண்டப்பம்

wpengine

மன்னாரில் நிராகரிக்கப்பட்ட 8 வேட்பு மனுக்கள்!

Maash