பிரதான செய்திகள்

யாழ் அல்லைப்பிட்டியில் கோர விபத்து 2 பெண்கள் ஸ்தலத்தில் பலி!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டிப் பகுதியில் இன்று (01) மாலை இடம்பெற்ற விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொரு பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

6 பேர் காரில் பயணித்த நிலையில் 2 பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய நூல்களை பாடசாலைகளுக்கு வழங்க தீர்மானம்

wpengine

அன்று மகிந்தவின் சகா இன்று சஜித்தின் ஆலோசகர்: கடுமையாக எதிர்க்கும் ஐ. மக்கள் சக்தியின் எம்.பிக்கள்

wpengine

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி! நிதி மோசடி பிரிவில்

wpengine