அறிவித்தல்கள்செய்திகள்பிராந்திய செய்திமுல்லைத்தீவுயாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. புதிய இடமாற்றங்களின் அடிப்படையில் முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளராக திருமதி ச.மஞ்சுளாதேவி, கரவெட்டி பிரதேச செயலாளராக திருமதி ம.உமாமகள், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளராக ஈ.தயாரூபன் ஆகியோர் பொதுச்சேவை ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த ச.சிவஸ்ரீ முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளராக, பொதுநிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சின் வருடாந்த இடமாற்றின் அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் தனது இடமாற்றத்தை எதிர்த்து பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டுக்கு அமைவாக பொதுச்சேவை ஆணைக்குழுவின் மீளாய்வுகளின்படி கோப்பாய் பிரதேச செயலாளராக தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரான திருமதி ச.மஞ்சுளாதேவி இதற்கு முன்னர் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளராகவும், கரவெட்டி பிரதேச செயலாளரான திருமதி ம.உமாமகள் இதற்கு முன்னர் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளராகவும், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளரான ஈ.தயாரூபன் இதற்கு முன்னர் கரவெட்டி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடமாற்றங்கள் தொடர்பில் மேலும் சில பிரதேச செயலாளர்கள் மேன்முறையீடுகளை மேற்கொள்ளவுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

Related posts

சுதந்திர நிகழ்வுக்கான நடவடிக்கையில் மன்னார் அரசாங்க அதிபர்

wpengine

மன்னாரில் பெற்றோல் வழங்கும் விபரம்! சில கிராம சேவையாளர் பிரிவு நீக்கம்.

wpengine

முன்னால் அமைச்சர் றிஷாட் மன்னார்-முசலிக்கான விஜயம் (படம்)

wpengine