பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் கைது!

நீண்ட காலமாக சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண்ணொருவர், 27 போத்தல்கள் மதுபானத்துடன் பொலிஸாரால் திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

இவர் கால் போத்தல் மதுபானத்தை ரூபா ஆயிரத்திற்கு விற்பனை செய்து வந்ததாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது. 

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மஹிந்த அரநாயகவுக்கு விஜயம் (படம்)

wpengine

றிசாத் பதியுதீன் பௌண்டேசனினால் மாணவர்களுக்கு கௌரவம் வழங்கும் நிகழ்வும் கற்றல் உபகரணம் வழங்கலும்

wpengine

20க்கு பதிலாக அமைச்சர் ஹக்கீம்,றிஷாட்க்கு வீட்டுதிட்டம்,மௌலவி நியமனம்

wpengine