பிரதான செய்திகள்

யாழ்பாணத்தில் அதிகாலை மீண்டும் வாள்வெட்டு! தொடர் பயங்கரவாதம்

யாழ். திருநெல்வேலி பகுதியில் இளைஞன் மீது இனந்தெரியாத நபர்கள் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

திருநெல்வேலி, கலட்டிச் சந்தியில் இன்று மாலை 6.30 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளைஞன் ஒருவன் மீது இனந்தெரியாத நபர்கள் சரமாரியாக வாளால் வெட்டியுள்ளதாகவும், வாள் வெட்டில் இளைஞனது விரல் துண்டாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கலட்டிப் பகுதியில் வேலைக்காக சென்ற இளைஞரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் வாளால் வெட்டியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், புலோலி பகுதியைச் சேர்ந்த தினேஸ்குமார் சலோஜிதன் (வயது 18) என்பவர் மீதே இவ்வாறு தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மான்,மரை,காட்டு பன்றிகளை மஹிந்த சாப்பிட முடியாது பொன்சேகா

wpengine

முசலி பிரதேசத்திற்கான களவிஜயம் மேற்கொள்ளும் முன்னால் அமைச்சர்

wpengine

கோத்தா நிதி மோசடி பிரிவில்

wpengine