யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள் , இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை(31) மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார தலைமையில் நடைபெற்ற போது , மீள் குடியேற்றம் மற்றும் காணி விடுவிப்பு தொடர்பிலான விடயம் கலந்துரையாடப்பட்ட போதே அவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 1775.27 ஏக்கர் காணி இராணுவத்தினரிடமும் , 160.67 ஏக்கர் காணி , கடற்படையினரிடமும் , 660.05 ஏக்கர் காணி விமான படையினரிடமும் , 28.28 ஏக்கர் காணி பொலிஸ் திணைக்களத்திடமும் காணப்படுகின்றன.
அதன்படி யாழ் . மாவட்டத்தில் 2ஆயிரத்து 642.29 ஏக்கர் தனியார் காணிகள் முப்படையினர் மற்றும் பொலிசாரின் வசம் உள்ளன என தெரிவிக்கப்பட்டது