யாரோ சேர்த்த நிவாரணத்திற்கு மு.கா.ஹரீஸ் உரிமை கோருவாரா?

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

கடந்த சில நாட்களாக சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல் தலைமையில் நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தமை யாவரும் அறிந்ததே.இவ் நிவாரண சேகரிப்பில் சாய்ந்தமருது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தில்சாத் தலைமையிலான இளைஞர் அணியினர் மிகவும் மும்முரமாக செயற்பட்டிருந்தனர்.

இப்படி சுட்டெரிக்கும் வெயிலில் சேகரிக்கப்பட்ட நிவாரணங்களை ஹரீஸ் தலைமையிலான அணியினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்க போகிறாராம் என்ற செய்தி மிக வேகமாக பரவி வருகிறது.இவ் நிவாரணங்களை ஏற்றிச் செல்வதற்கான வாகன வசதிகளை பிரதி அமைச்சர் ஹரீஸ் அணியினர் செய்துள்ளார்களாம்.நான் இச் செய்தியை அறிந்தவுடன் சாய்ந்தமருதைச் சேர்ந்த சிலருக்கு அழைப்பை ஏற்படுத்திக் கேட்டேன்.அவர்களும் இவ்வாறானதொரு கதை இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள்.

இச் செயலை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.இதனைத் தான் ஊரா கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவது என்பார்கள்.இவ் நிவாரண சேகரிப்பில் மிகவும் மும்முரமாக நிண்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தில்சாத் அ.இ.ம.காவின் ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.பள்ளிவாயல் நிர்வாகத்தினர்களில் அதிகமானவர்கள்  பிரதி அமைச்சர் ஹரீசின் ஆதரவாளர்கள் என்பதால் இது சாத்தியப்படுமெனவும் எனக்கு இத் தகவலை வழங்கிய குறித்த நபர் மிகவும் கவலையோடு தெரிவித்தார்.சாய்ந்தமருது மக்கள் இதனைத் தடுப்பார்களா?

 

 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares