பிரதான செய்திகள்

யாருடைய தேவைக்காகவும் தேர்தலை பிற்போடவில்லை – மகிந்த தேசப்பிரிய

யாருடைய தேவைக்காகவும் தேர்தலை பிற்போடவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை முன்வைக்க தவறும் வேட்பாளர்களது குடியுரிமையை குறுகிய காலத்திற்கு தற்காலிகமாக ரத்து செய்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை கையளிக்க தவறிய வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் அனுப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தல்களின் போது குறித்த விபரங்களை கையளிக்க தவறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ரணில் அரசின் திட்டத்தை கோத்தா அரசு இடநிறுத்தம்

wpengine

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை

wpengine

புதுவெளிச் சந்தியில் பஸ் தரிப்பிடம் அமைக்கப்பட வேண்டும்! வடமாகாண போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு

wpengine