பிரதான செய்திகள்

யானை விடயத்தில்; வனஜீவராசிகள் திணைக்களத்தின் காலம் கடந்த ஞானம்

காட்டு யானைகள் பிரவேசிக்கும் பகுதிகளுக்கு அண்மையில் பயணிக்கும் ரயில்களில் இன்று முதல் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ரயில் மார்க்கங்களை கண்காணித்து ரயில் சாரதிகளுக்கு வழிகாட்டுவதற்கே அவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அதற்கமைய தலைமன்னார் முதல் மதவாச்சிக்கு இடைப்பட்ட ரயில் மார்க்கத்திலும், மதவாச்சி தொடக்கம் கிளிநொச்சி வரையான ரயில் மார்க்கத்திலும் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தபடவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.எஸ்.கே பத்திரத்ன குறிப்பிட்டுள்ளார்.

செட்டிக்குளம் பகுதியில் ரயிலில் மோதுண்டு நான்கு காட்டு யானைகள் உயிரிழந்ததை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ரயிலில் மோதுண்டு 10 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

விடைபெறும் முதலமைச்சர்

wpengine

2 வருடங்கள் கடந்த புதிய கடவுச்சீட்டுக்கான 26,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் விண்ணப்பங்கள்.

Maash

நாட்டில் மீண்டும் இனவாத மோதல்களை ஏற்படுத்த முயற்சி – அனுரகுமார திஸாநாயக்க

wpengine