யானை குட்டி விவகாரம்! உடுவே தம்மாலோக்க தேரர் வசித்து வரும் ஆலயங்கள் பதிவு செய்யப்படவில்லை.

பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள உடுவே தம்மாலோக்க தேரர் வசித்து வரும் நாராஹென்பிட்டிய ஹெலன் மெத்தினியாராம வணக்க ஸ்தலம், விகாரைகள் மற்றும் ஆலயங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், விகாரையில் சட்டவிரோதமாக குட்டி யானை ஒன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பான பொறுப்பை தம்மால் ஏற்க முடியாது என பௌத்த விவகார ஆணையாளர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இது தொடர்பான அறிக்கை ஒன்றை கொழும்பு  நீதவான் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.

முன்வைக்கப்பட்ட வாதங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், சம்பவமானது பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வருவதால், வழக்கு விசாரணைகளுக்காக சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares