செய்திகள்பிரதான செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஒன்று பாரஊர்தியுடன் மோதியதில் ஒரு வயது பெண்குழந்தை பலி..!

கொழும்பில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (22) இடம்பெற்றுள்ளது. செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாரஊர்தியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் குழந்தை ஒன்று படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரபல தமிழ் நடிகர் ஸ்ரீகாந் அதிரடியாக கைது; காரணம் இதுதான்
கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த ஒரு வயதுடைய பெண் குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலிருந்து ஊழல் மோசடிகள்

wpengine

ஆடைகள் மீதான உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் டிஜிட்டல்மயமாக்கலின் உதவி தேவைப்படுகின்றது’

wpengine

கிழக்கு மகாண கல்விப் பணிப்பாளரிடம் தோற்றுப்போன ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

wpengine