உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மோடி பேசியதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்.

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்திற்கு விடுதலை கோரி பலூச் தேசியவாத அமைப்பு போராடி வருகிறது. இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு ஆதரவாக பேசியதையடுத்து இவ்விவகாரம் பெரிய அளவில் பேசப்படுகிறது. போராட்டக்காரர்களும் தங்கள் போராட்டத்தினை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு பலூச் தேசியவாத அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய-அமெரிக்க சமுதாய உறுப்பினர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அப்போது பாகிஸ்தானில் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒடுக்கப்படுவதை கண்டித்தும், பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதை அமெரிக்கா நிறுத்த வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதுதொடர்பான பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

பாகிஸ்தானில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், பொதுமக்களை கடத்தல் மற்றும் கொலை, பெண்கள் பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை கண்டித்தும் முழக்கமிட்டனர். சமீபத்தில் இந்தியாவின் உரி பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கீதத்துடன் போராட்டத்தை நிறைவு செய்தனர்.

Related posts

பொது வேட்பாளரை நியமிப்போம் என பிரதமர் கூறினார்.

wpengine

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் தமிழ்,முஸ்லிம்,சிங்கள இளைஞர்கள் பங்குகொள்ளும் மென்பந்து கிரிக்கெட்

wpengine

3 water projects in Sri Lnaka – Indian Export-Import Bank given Loan US$ 304 million

wpengine