பிரதான செய்திகள்

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் மொட்டைத்தலை

(முஹமட் ஹஸ்னி)
வை எல் எஸ்ஸின் பெயரைப் பயன்படுத்தி ரிஷாட் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி குளிர்காய நினைக்கும் முஸ்லிம் காங்கிரஸின் அடிவருடிகளின் எழுத்துக்கள் தற்போது அம்பலத்துக்கு வரத்தொடங்கியுள்ளன.


முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தவர் ஒருவரின் கையாளாக செயற்பட்டு வரும் ஒருவர் ஹுஸைன் ஜஸ்மீன் எனும் போலி முகநூலைப் பயன்படுத்தி வை எல் எஸ், ரிஷாட்டுக்கு அச்சுறுத்தல் விடுவது போல எழுதியிருக்கும் முகநூல் பதிவொன்றுக்கு வை எல் எஸ் தனது முகநூலில் பதிலொன்றை பதிவிறக்கம் செய்துள்ளார்.

வை எல் எஸ்ஸுக்கும் ரிஷாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை மேலும் பிளவாக்கி தங்கள் அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் எத்துணை தூரம் ஆர்வம் காட்டுகின்றது என்பதற்கு இந்த பதிவும் வை எல் எஸ்ஸின் பதிவும் பெரிய ஆதாரமாகும்.

தாருஸ்ஸலாமின் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற ஆவணங்கள் வெளிவந்ததிலிருந்து முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும், கூஜா தூக்கிகளும் நக்குண்ணி எழுத்தாளர்களும் உறைந்து போய்க் கிடக்கின்றனர்.
சாய்ந்தமருதுவைச் சேர்ந்த மொட்டை எழுத்தாளர் தாருஸ்ஸலாம் கதையை திசை திருப்பி அதை வேறு திசையில் கொண்டு செல்வதற்கு முயற்சிக்கின்றார்.

எழுத்துலகில் தன்னை ஒரு ஜாம்பவனாக காட்டிக்கொள்ளும் இந்த மொட்டை எழுத்தாளர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரினதும் பிரதித்தலைவரினதும் ஏனைய முக்கியஸ்தர்களினதும் பகற்கொள்ளை பற்றியோ, சமூகத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அவர்களின் ஈனச்செயல் பற்றியோ ஒரு வார்த்தை கூட தனது எழுத்துக்களில் கொண்டு வராமை அவர் மஞ்சள் கவருக்காக சோரம் போய்விட்டதை எடுத்துக்காட்டுகின்றது. இந்த மொட்டை எழுத்தாளரே வை எல் எஸ்ஸின் பெயரைப் பயன்படுத்தி ரிஷாட்டை தூஷிக்கும் இந்தப் பதிவை இட்டிருப்பது ஆதாரப்பூர்வமாக அம்பலத்துக்கு வந்திருக்கின்றது.

தூ…. மொட்டையே உன் எழுத்துக்களை இனியாவது மூளை பாவித்து எழுது!!!

Related posts

வங்காலை மீனவர்களுக்கு கடல்பாசி வளர்ப்புத்திட்டம் -டெனிஸ்வரன்

wpengine

கல்குடாவில் ஒற்றுமைப்பட்ட சமூகமாக, ஊரோடு ஒத்தோடுகின்ற அனைவரும் செயற்பட வேண்டும்

wpengine

கூறி ஏதேனுமொரு வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? மஹிந்த கேள்வி

wpengine