மொட்டு கட்சி இன்று வடக்கு மற்றும் தெற்கில் இனவாதத்தை தூண்டிவிட்டுகின்றது.

மொட்டு கட்சி இன்று வடக்கு மற்றும் தெற்கில் இனவாதத்தை தூண்டிவிட்டு, தேர்தல் நடவடிக்கையைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எரான் விக்கிரமரத்ன, இனம், மதம் பேதமின்றி செயற்படும் ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே எனத் தெரிவித்தார்.

இன்று (28) யட்டியந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், ஐக்கிய மக்கள் சக்தி என்பது டி.எஸ். சேனாநாயக்கவின் கொள்கைகளையுடைய ஒரே கட்சியாகும். கட்சியின் பெயர் மாறியது என்பதற்காக எமது கொள்கைகள் மாறவில்லை என்றார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares