மொட்டு கட்சியினை பலப்படுத்த றிஷாட்டையும் குடும்பத்தையும் பயன்படுத்துகின்றார்கள்.

பலவீனமடைந்து வரும் தமது தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடைமுறைப்படுத்தியுள்ள புதிய வழிமுறை சம்பந்தமாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த தகவலை கூறியுள்ளார்.


பலவீனமடைந்து வரும் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்திய வெற்றிகரமான சூத்திரமான எம்.சீ.சீ, றிசார்ட் பதியூதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சுமத்தி, முஸ்லிம் விரோத போக்கை மீண்டும் உயிரூட்டியுள்ளது.


பொய், மேலும் மேலும் பொய்கள் என மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares