மொட்டுக்கட்சி ராஜாங்க அமைச்சர்களுக்கிடையில் துப்பாக்கி மோதல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் இருவருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


கண்டி பிரதேசத்தில் இவர்கள் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றியதால், இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


இருவரும் பரஸ்பரம் தாக்கிக்கொள்ளும் அளவுக்கு மோதல் முற்றியதாகவும், அப்போது முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஒருவர் தமது கைத்துப்பாக்கியை வெளியில் எடுத்துள்ளதாகவும் அதிஷ்டவசமாக அதில் தோட்ட இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபடும் ஒரே கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு இடையில் விருப்பு வாக்கு தொடர்பான மோதல்கள் ஏற்பட்டு வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares