மொட்டுக்கட்சியில் சில தகுதியில்லாத வேட்பாளர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் நாடாளுமன்றத்துக்கு தகுதியில்லாத சிலர் வேட்பாளர்களாக உள்ளனர் என்று அந்தக்கட்சியின் பெண் வேட்பாளரான ஒஷாடி ஹேவமத்தும குற்றம் சுமத்தியுள்ளார்.


இந்தநிலையில் புத்திசாலித்தனமாக நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்காது போனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சந்தித்த அதே பிரச்சனையை தற்போதைய ஜனாதிபதி கோட்டாபயவும் சந்திப்பார் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஏற்கனவே குறித்த பிரச்சனையை மைத்திரிபால சிறிசேனவினாலும், ரணில் விக்கிரமசிங்கவினாலும் தீர்க்கமுடியாமல் போனது என்றும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.


இந்தநிலையில் பொதுஜன முன்னணி தமது வேட்பாளர் பட்டியல்களில் கழுதைகளையும், குதிரைகளையும் இணைந்துள்ளது.


இதன்போது வாக்காளர்கள் குதிரைகளை தெரிவுசெய்து கழுதைகளை அவற்றின் வீடுகளுக்கு அனுப்பவேண்டும் என்றும் ஓஷாடி கோரியுள்ளார்.


அத்துடன் முடிவுகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெருன்பான்மையை வாக்காளர்கள் வழங்கவேண்டும் என்றும் ஓஷாடி ஹேவமத்தும தமது பேஸ்புக் பதிவில் குற்றம் சுமத்தியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares