மொட்டுக்கட்சியின் தேர்தல் பிரச்சாரம் 3நாள் மூடக்கம்- ராஜபஷ்ச

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து பிரசாரக் கூட்டங்களையும் அடுத்த 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


நாட்டுக்கு பொறுப்புக்கூறும் அரசியல் கட்சி என்ற வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதம செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.


அனைத்து பிரசாரக் கூட்டங்களையும் 3 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியதாகவும் அவர் கூறினார்.


இதற்கமைய, நாளை (13) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பிரசாரக் கூட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


இதனைத் தவிர பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்புக்கள் மற்றும் சிறியளவிலான கூட்டங்களையும் மட்டுப்படுத்துமாறு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.


இத்தகைய சிறிய கூட்டங்களை நடத்துவதாக இருந்தால் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக மாத்திரம் அவற்றை ஒழுங்குசெய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதம செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares