மொட்டுக்கட்சிக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டும்! வேறு யாருக்கும் பதவி வழங்க விடமாட்டோம்.

ஐக்கிய மக்கள் சக்தி அல்லது வேறு எந்த கட்சியில் இருந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்தாலும் பொதுஜன பெரமுன கட்சிக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கும் வரை வேறு யாருக்கும் பதவிகள் வழங்க உடன்பட மாட்டோம் என மஹிந்த தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவொன்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிடம் தங்கள் முடிவை அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது கட்சிக்கு சொந்தமான 16 அமைச்சுப் பதவிகளும் புதிதாக வழங்கப்பட வேண்டுமெனவும், புதியவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாவிட்டால் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில் இருந்து விலகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு நிறைவடைந்தவுடன், சம்பந்தப்பட்ட அமைச்சரவையை புதிதாக நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்க்கட்சியில் இருந்து வருபவர்களுக்கு பிரதான அமைச்சு பதவிகளை வழங்க வேண்டாம் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares