பிரதான செய்திகள்

“மைலோவில்” அதிக சீனி மட்டம்! ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளையோர் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள சொக்கலட் கலக்கப்பட்டுள்ள “மைலோ” என்ற பானத்தில் அதிக அளவில் சீனி மட்டம் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய நீரிழிவு தின நடைப்பயணத்தில் நேற்று கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

பானத்தில் பொதுவாக 5 வீதம் சீனி காணப்பட வேண்டும், எனினும் மைலோவில் 16.5 வீதம் காணப்படுகின்றது என அறிவித்துள்ளார்.

எனினும் சுகாதார அதிகாரிகள் இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நான் சிகரட், மதுபானம் மற்றும் சில பால்மா நிறுவனங்களின் கோபத்தை சம்பாதித்துள்ளேன். தற்போது மைலோ உற்பத்தியாளர்களின் கோபத்தையும் சம்பாதித்து விட்டேன்.

கோபம் கொண்டால் பரவாயில்வை. ஆனால் உண்மையை கூற வேண்டும். இந்த பானத்தில் சீனியின் அளவை குறைக்க வேண்டும்.

அவ்வாறு குறைக்காமல் விட்டால் எதிர்வரும் காலங்களில் மைலோவை தூக்கிக்ககொண்டு நாடு முழுதும் சென்று மைலோவினால் ஏற்படும் பாதிப்புக்களையும், சீனியின் அளவு மைலோவில் குறிப்பிடப்படாமைக்கான காரணத்தையும் மக்கள் மத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், கடந்த காலங்கள் முழுவதும் பன்னாட்டு பால்மா நிறுவனங்கள் தொடர்பில் கடுமையான கொள்கையில் இருந்த ஜனாதிபதியினால் இந்த நாட்டில் உள்ள பிரதான பன்னாட்டு பால்மா நிறுவனமான நெஸ்ட்லே நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.

Related posts

தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டம்,பதவிக்காக செயற்பட கூடாது – டெனீஸ்வரன்

wpengine

150ஆவது ஆண்டு நிறைவு! புதிய 20 ரூபாய் நாணயங்கள் வெளியிடு

wpengine

றிஷாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கும் மலையக மக்கள் முன்னணி ஆதரவு வழங்காது

wpengine