பிரதான செய்திகள்

மைத்திரியின் சந்திப்பின் பின்னர் ஞானசார தேரர் விடுதலை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டிருந்த பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தேரர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 6 வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிறைச்சாலை சென்றிருந்த ஜனாதிபதியை, ஞானசார தேரர் சந்தித்து தனது விடுதலை தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஞானசார தேரோவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு அரசியல் தலவர்கள் மற்றும் சர்வமத தலைவர்கள் உட்பட பல அமைப்புக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ஞானசார தேரருக்கான பொதுமன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்ட போதிலும், அவர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துசார உபுல் தெனிய தெரிவித்தார்.

இன்று அல்லது நாளை காலையில் ஞானசார தேரர் சிறையிலிருந்து வெளியேறுவார் என பொதுபல சேனாவின் செயற்பாட்டாளர் நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts

இராஜினாமா செய்த அமைச்சர்கள் மீண்டும் மஹிந்த அணியுடன் இணைவு

wpengine

தேர்தல் தொடர்பான சுகாதார ஒழங்கு வீதிகள்

wpengine

தேர்தலில் போட்டியிட விரும்பாத போதும் காலத்தின் தேவை

wpengine