பிரதான செய்திகள்

மைத்திரியினை பாராளுமன்றத்திற்கு அனுப்பக்கூடாது! சிறையில் அடைக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்ல வேண்டியது சிறைச்சாலைக்கே அன்றி நாடாளுமன்றத்திற்கு அல்ல என நாமல் குமார தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பந்தமாக தான் பொறுப்புக் கூற வேண்டியதில்லை என முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்தை முற்றாக நிராகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.


அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு பொலிஸ் மா அதிபரை கூட அழைக்கவில்லை.


நாட்டின் அனைத்து பாதுகாப்பு துறைகளுக்கும் பொறுப்பாக இருந்த முன்னாள் ஜனாதிபதி தனது பொறுப்பில் இருந்து விலகி செல்ல முடியாது. அவரை அனுப்ப வேண்டியது நாடாளுமன்றத்திற்கு அல்ல சிறைச்சாலைக்கு எனவும் நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.


நாமல் குமார நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை கொலை செய்ய சதித்திட்டம் இருப்பதாக கூறி ஒலித் தட்டுக்களை வெளியிட்ட காரணத்தினால், அப்போது பரப்பரப்பாக பேசப்படும் நபராக இருந்தார்.

Related posts

இப்படியான இடத்தில் அரசியல் பேச உங்களுக்கு என்ன பைத்தியமா” சந்திரிக்கா

wpengine

பிரதமர் ரணிலை வைத்து சதொச நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் றிஷாட்

wpengine

பிரதேச செயலகத்தின் அசமந்த போக்கு! குரங்கள் அடையும் வீடுகள்

wpengine