பிரதான செய்திகள்

மைத்திரிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் அமைப்பை மீறிவருகின்றார் என தெரிவித்து அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான நிரந்தர தலைவரை நியமிக்காமல் அரசியலமைப்பை மீறி வருகிறார் என குற்றம் சுமத்தியே இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

14 நாட்களுக்கு மட்டுமே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் ஒருவரை நியமிக்க முடியும். எனினும், நீதியரசர் தீபாலி விஜேசுந்தரவை மீண்டும் மீண்டும் நியமிக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கையை சவாலுக்குட்படுத்தியே இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்கு அரசியலமைப்பு சபையினால் நிராகரிக்கப்பட்ட நீதியரசர் தீபாலி விஜேசுந்தரவின் பெயரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் மீண்டும் பரிந்துரைத்து வருகிறார்.

மேல்முறையீட்டு நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகள் மற்றும் ஏனைய உயர்மட்ட அரச பதவிகளுக்கு அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடனேயே நியமனங்களை மேற்கொள்ள முடியும்.

இதேவேளை, 14 நாட்கள் வரை பதில் நியமனங்களை ஜனாதிபதியினால் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

குற்றமிழைக்காமல் 23 வருட சிறைவாசம்! நிசாரூதினின் சோகம்

wpengine

ரோஹிங்கிய முஸ்லிம்களிடம் தோல்வி அடைந்த ஐ.நா

wpengine

நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை 100 ரூபாயினால் குறைகிறது!

Editor