பிரதான செய்திகள்

மைத்திரி,கோத்தா ஆகியோரை கொலை செய்ய ரணில் சதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கான சதி முயற்சியில் பிரதமர் ரணில் உட்பட பொலிஸ் மா அதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாளக சில்வா ஆகியோர் தொடர்புபட்டுள்ளனர் என ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே அந்த சதி முயற்சியுடன் தொடர்புடைவர்களை பணி நீக்கம் செய்து கைது செய்து விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் பாதாள உலகக் குழுக்களுடன் இணைந்து சதி முயற்சியில் ஈடுபடுவார்களாயின் அதனை எவரிடம் முறையிடுவது?
ஆகவே நாட்டு மக்கள் பொலிஸார் மீது நம்பிக்கையிழந்துள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த சதி முயற்சியுடன் தொடர்புடைவர்களை பணி நீக்கம் செய்து கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி, அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம்!!! – “மன்னாரில் கையெழுத்து சேகரிப்பு”

Maash

11 மாவட்டங்களில் எட்டு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு

wpengine

விக்னேஸ்வரனின் இலக்கு தனி நாடு! அரசை விட்டுக்கு அனுப்ப வேண்டும்

wpengine