மே 18ஐ தமிழர் பிரிவினை வாதிகளுக்கு மகிழ்ச்சியானதாக மாற்ற அரசாங்கம் முயற்சி.!

எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அந்த நாளை தமிழ் பிரிவினைவாதிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக மாற்றுவதற்காகவே நல்லாட்சி அரசாங்கம்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் வருத்தமளிப்பதாக கூறினார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தூய்மையான ஹெல உறுமயவின் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares