மே மாதம் சம்பளம் பெறாத 7500 அரச ஊழியர்

கொரோனா வைரஸ் காரணமாக அரச நிறுவனங்கள் சிலவற்றில் சம்பள கொடுப்பனவுகளை குறைக்கவும், ஊழியர்களை பணியில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.


இது கொரோனா வைரஸ் காரணமாக அரசாங்கம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மிகவும் ஆழமாக அதிகரித்துள்ளதாகவும் இந்த பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மீது சுமத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தின் ஒரு பகுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.


7 ஆயிரத்து 500 ஊழியர்களை கொண்டுள்ள ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் மே மாதத்திற்கான ஊழியத்தை இதுவரை ஊழியர்களுக்கு வழங்கவில்லை.


கூடிய விரைவில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதாக அந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

சம்பளம் தாமதமாவதற்கான காரணத்தை நிறுவனம் ஊழியர்களுக்கு அறிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares